எக்சிட் போல் அல்ல மோடி மீடியாவின் ஃபேண்டஸி போல்: ராகுல் சுளீர்!

Published On:

| By Selvam

“நேற்று வெளியானது எக்சிட் போல் அல்ல, மோடி மீடியாவின் ஃபேண்டஸி போல்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 2) தெரிவித்துள்ளார்.

ஏழு கட்டமாக நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்தது. இந்தநிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில், தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்திற்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அதாவது எக்சிட் போல் செய்தி தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்திருந்தார்.

பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்குபெறும் என்றும் 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்திருந்தார்.

நேற்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தன.

இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18, ஏபிபி சி வோட்டர்ஸ் போன்ற முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி 150 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இது எக்சிட் போல் அல்ல, மோடி மீடியாவின் ஃபேண்டஸி போல்” என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், “சித்து மூஸ்வாலாவின் 295-ஆவது பாட்டு” என்று தெரிவித்தார்.

சித்து மூஸ்வாலா பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற பாடகர். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்aபல் சித்து மூஸ்வாலா கொலைக்கு பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் பிரேக்: வானிலை மையம் அப்டேட்!

கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள்… விமான நிலையத்தில் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share