ADVERTISEMENT

தேர்தல் பத்திரங்கள்.. மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல் தாக்கு!

Published On:

| By Selvam

தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை “பாரத ஒற்றுமை நீதி யாத்திரை” நடத்தி வருகிறார். இந்த யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இன்று (மார்ச் 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர் பேசியதாவது, “தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது சர்வதேச அளவிலான, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டமாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் பின்தொடர்ந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசியல் கட்சிகளை உடைப்பதற்கும் இந்த திட்டம் பயன்பட்டுள்ளது. ” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஏழைகள் போன்றவர்கள் மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். ஆனால், அரசு மற்றும் தனியார் துறைகளில் மிகக்குறைந்த பிரதிநிதித்துவத்தையே அவர்கள் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தபோது, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ பிரதமர் மோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வடிவில் பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏழைகள் யாரும் அந்த கும்பாபிஷேக விழாவில் இல்லை. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூட அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமர் வருகையால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை காட்டம்!

ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா சட்டமன்ற தேர்தல்கள் முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share