மலையாள இசையமைப்பாளரை ‘பாலோ’ செய்யும் ரஹ்மான்

Published On:

| By uthay Padagalingam

மலையாளத் திரையுலகில் ‘மோஸ்ட் வாண்டெட்’ இசையமைப்பாளராக விளங்குபவர் சுஷின் ஷ்யாம்.

’கிஸ்மத்’ படத்தில் அறிமுகமான இவர் கும்பளாங்கி நைட்ஸ், அஞ்சாம் பதிரா, வைரஸ், மாலிக், மின்னல் முரளி, ரோமாஞ்சம் என்று அவர் இசையமைத்தவற்றில் பல வெற்றிப் படங்களாகவும் விமர்சனரீதியில் கவனிக்கத்தக்கவையாகவும் இருந்து வருகின்றன.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மள் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘உள்ளொழுக்கு’, ‘போகன்வில்லா’ ஆகியன சுஷின் ஷ்யாம் இசையமைத்தவைதான்.

இவை நான்கும் மலையாளத் திரையுலகின் முக்கியமான படங்களாகத் திகழ்கின்றன. ஆண்டுக்கு இரண்டு முதல் நான்கு திரைப்படங்கள் வரை பணியாற்றிவரும் இவர், தமிழில் ஜித்து மாதவன் இயக்கவிருக்கிற படத்திற்கும் இசையமைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ADVERTISEMENT

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நடிப்பதுடன், இதனைத் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது போக ’மஞ்ஞும்மள் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்தபடமான ‘பாலன் தி பாய்’ படத்திற்கும் இவர் இசையமைக்கிறார்.

தற்போது ‘ரே’ எனும் மியூசிக் வீடியோ ஒன்றைத் தயாரித்து, இசையமைத்து, பாடி வெளியிட்டிருக்கிறார் சுஷின் ஷ்யாம். இதனைக் கண்ட ஏ.ஆர்.ரஹ்மான் இவரைப் பாராட்டியிருக்கிறார். கூடவே, இன்ஸ்டாகிராமில் இவரை ‘பாலோ’ செய்யத் தொடங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

அதனை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து வெளியிட்டிருக்கும் சுஷின் ஷ்யாம், ‘இது எனது முதலாவது ஃபேன்பாய் மொமண்ட்’ என்று ‘கமெண்ட்’ இட்டிருக்கிறார்.

கடமையை மிகச்சீர்மையுடன் செய்தால் இப்படிப் பல ஆச்சர்யங்கள் எதிர்பாராத திசையில் இருந்தும் வருமோ..?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel