Champions trophy : அறிமுகம் ஆன முதல் போட்டியில் அபார சதம் அடித்த ரச்சின்

Published On:

| By christopher

rachin ton helps nz to move semis

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. rachin ton helps nz to move semis

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் நேற்று (பிப்ரவரி 24) நடந்த லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஷான்டோ 77 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் சிறிது பொறுப்புடன் விளையாடிய ஜாக்கர் அலியால் (45) அந்த அணி 200 ரன்களை கடந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் சதம் கண்ட வில் யங் டக் அவுட் ஆனார். தொடர்ந்து வில்லியம்சனும் (5), கான்வே (30) ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ரச்சின் அபார சதம்! rachin ton helps nz to move semis

இந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லதாம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் வங்கதேச அணியை பந்துவீச்சை பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். அவ்வபோது பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய ரச்சின் ஒருநாள் போட்டியில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அறிமுகமான ஐசிசி தொடரில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ஆனார் ரச்சின் (4 சதம், 11 இன்னிங்ஸ்). கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ரச்சின் 3 சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத்தொடர்ந்து லதாம் தனது 25வது அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் ஆட்டமிழந்த நிலையில், பிலிப்ஸ் (21), பிரேஸ்வெல் (11) கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். 46.1 ஓவரில் 240 ரன் எடுத்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து rachin ton helps nz to move semis

இதன்மூலம் ஏ பிரிவில் மீண்டும் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அதே போன்று இந்திய அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறின.

இந்த நிலையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பலம் வாய்ந்த அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லீக் போட்டியில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் இன்று ராவல்பிண்டி மைதானத்தில் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share