இந்தியாவுக்கு வில்லனாக மாறியுள்ள சென்னை வீரர்… ரச்சினை தூக்குவது எப்படி?

Published On:

| By Kumaresan M

rachin : Sanjay Bangar warns India

நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் எச்சரித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரச்சின் ரவீந்திரா அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 3 இன்னிங்ஸ்கள் விளையாடி 226 ரன்களை அவர் அடித்துள்ளார். அதோடு, இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.rachin : Sanjay Bangar warns India

நியூசிலாந்து அணியின் இரண்டு வெற்றிகளுக்கும் ரவீந்திராவின் சதம் முக்கிய காரணமாகவும் இருந்தது. அதுவும , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள்தான் நியூசிலாந்து அணிக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளனர். ரச்சின் மட்டுமல்ல கான்வே, மிட்செல், என அனைவரும் சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். rachin : Sanjay Bangar warns India

rachin : Sanjay Bangar warns India

ரச்சின் குறித்து பேசிய சஞ்சய் பங்கர், “இந்திய அணி ரச்சின் ரவீந்திராவின் பலவீனத்தை கண்டறிய முயற்சிக்க வேண்டும். அவரிடம் எந்த பலவீனத்தையும் நாம் எளிதாக கண்டுபிடித்து விட முடியாது., ஆஃப் ஸ்டம்பில் வைடாக பந்து வீசினால் மட்டுமே ஏதாவது அவுட் ஆகும் வாய்ப்பு உருவாகும். நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு நிச்சயம் சவால் அளிக்கும். தரமான வீரர்களை அந்த அணி கொண்டுள்ளது. அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். நியூசிலாந்து அணி எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்பவும் விளையாடத் தயாராகவே இருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணியை இந்தியா இறுதி ஆட்டத்தில் சந்திக்கிறது. துபாய் மைதானத்தில் ஏற்கனவே, இந்திய அணியிடம் நியூசிலாந்து தோற்றிருந்தாலும், களத்தின் தன்மையை அறிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share