ADVERTISEMENT

ரேபிஸ் நோய் பாதிப்பு : இளைஞர் தற்கொலை!

Published On:

| By Kavi

Rabies infection Youth suicide

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் மன உளைச்சலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். Rabies infection Youth suicide

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(25). இவர் மூன்று மாதங்களுக்கு முன் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பூனைகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தது.

ADVERTISEMENT

இதனால் அந்த பூனைகளை பாலமுருகன் விரட்டியிருக்கிறார். அப்போது ஒரு பூனை அவரை கடித்திருக்கிறது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அலட்சியமாக விட்டுள்ளார்.

இந்நிலையில் காயம் பெரிதாகி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பாலமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள் ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்தனர். ஆனால் அங்கு இருக்க பிடிக்காமல் தப்பி ஓட முயன்றிருக்கிறார் பாலமுருகன்.

அதிகாலையில் நடந்த சோகம் Rabies infection Youth suicide

அவரை பிடித்து மருத்துவ பணியாளர்கள் மீண்டும் அவருடைய பெட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து ரேபிஸ் சிகிச்சைக்காக தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் தான் மன உளைச்சலில் பாலமுருகன், அவருக்கு கொடுத்திருந்த போர்வையால் இன்று அதிகாலை தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பூனை கடித்ததை அலட்சியமாக விட்டு தற்போது நோய் பாதிப்பு அதிகமானதும் இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருப்பது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Rabies infection Youth suicide

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share