10 கோடி பார்வைகளை கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்!

Published On:

| By christopher

Water Packet song crosses 100 crore views

இசையமைப்பாளர்ஏஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்களில்  ”ஆளப் போறான் தமிழன், வெறித்தனம், மல்லிப்பூ வச்சி வச்சி, சிங்கப்பெண்ணே” ஆகிய பாடல்கள் 10 கோடி பார்வைகளைப் யுடியுபில் பெற்றது.

அதனை தொடர்ந்து “வாட்டர் பாக்கெட் பாடல் 10 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நாயகன், நாயகிகள் பங்கேற்கும் பாடல்களே இது போன்று அதிகமான பார்வைகளை பெற்று சாதனை நிகழ்த்துவது வாடிக்கை. படத்தில் துணை கதாபாத்திரங்களாக நடித்தவர்கள் பங்கேற்ற பாடல் 10 கோடி பார்வைகளை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

தனுஷ் நடித்து இயக்கி ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான படம் ‘ராயன்’. இந்த வருடம் வெளியான நேரடி தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கடந்த இப்படத்தில் இடம் பெற்ற ‘அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட்’ உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

ADVERTISEMENT

இதில் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் தனுஷின் தம்பியாக நடித்த சந்தீப் கிஷன் மற்றும் அவரது காதலியான அபர்ணா பாலமுரளி இடையிலான ஒரு டூயட் பாடலாக இடம் பெற்றது.

சென்னைத் தமிழ் ஸ்டைலில்  அமைந்த இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

ADVERTISEMENT

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை : ஓங்கும் காங்கிரஸ்! 

பிக் பாஸ் சீசன் 8 : சாச்சனாவுக்கு நேர்ந்தது அநியாயமா?

டாப் 10 நியூஸ் : தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை வரை!

கிச்சன் கீர்த்தனா : பைனாப்பிள் பூந்தி

இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு

சாம்சங் போராட்டம் முடிந்ததா? இல்லையா? – தொடரும் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share