தனுஷுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா: ‘ராயன்’ டிரைலர் எப்படி?

Published On:

| By Selvam

தனுஷ் நடித்து, இயக்கி இருக்கும் படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தனுஷ் நாயகனாக நடித்து வெளிவரும் 50வது திரைப்படமாகும்.

அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூலை 26-ஆம் தேதி வெளிவர உள்ள ராயன் படத்தின் முதல் பார்வை வெளியான போதே படம் சினிமா வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது. ஒரு நடிகன் தான் நடிக்கும் 50வது படத்தை அவரே திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவது இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படத்திற்கான எதிர்பார்ப்பை, படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவது படத்தின் முதல் தோற்றமும், அந்தப் படத்தின் உள்ளடக்கத்தை சுருங்க கூறும் டிரைலர் மட்டுமே. நேற்று (ஜூலை 16) மாலை ராயன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ரத்தம் தெறிக்க 1.49 நிமிடம் திரையில் ஓடக் கூடிய ராயன் டிரைலர் வட சென்னை பின்னணியில், தாதா தொடர்பான கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. திரைக்கதைக்கு வலிமை சேர்ப்பது நாயகனுக்கு இணையான வலிமையான வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். தனுஷ் – எஸ்.ஜே.சூர்யா இடையேயான மோதல் தான் கதை என புரிந்து கொள்ள முடிகிறது.

‘காட்டுலையே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?’ என செல்வராகவன் கேட்க, ‘சிங்கம் தான்’ என்கிறார் குட்டி தனுஷ். ‘ஆபத்தான மிருகம் ஓநாய். ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாய அடிச்சிடும். ஆனா ஓநாய் தந்திரவாதி” என்ற செல்வராகவனின் வசனம் காட்சிகளுடன் பொருந்தி போகிறது.

எஸ்.ஜே.சூர்யா வில்லன் என்றால், அதே போன்று பிரகாஷ் ராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின்பின்னணி இசை  வட சென்னையை பின்புலமாக கொண்டஅழுத்தமான ஆக்‌ஷன் கதைக்களத்திற்கு பொருந்திப் போகிறது.

RAAYAN - Official Trailer | Dhanush | Sun Pictures | A.R. Rahman

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

Share Market: இன்று விடுமுறை… இந்த வாரம் ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் இவைதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share