r50 குழந்தைகளுக்கு காக்ளியர் அறுவைசிகிச்சை!

Published On:

| By Balaji

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 27) ஆடியோ வெர்பெல் தெரபி எனும் காக்ளியர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கான பேச்சுப் பயிற்சிக்கான முறை கொண்டுவரப்பட்டது. அரசு மருத்துவமனையிலேயே வயதுவரம்பு அரசு காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, “தென் தமிழகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறவியிலே முற்றிலும் காது கேளாத, வாய் பேசாத ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள இச்சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. கடந்த 2015 ஜனவரி முதல் தற்போதுவரை 61 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்று நல்ல முறையில் காது கேட்கவும் பேசிக் கொண்டும் அந்தக் குழந்தைகள் இருக்கின்றனர்.

தற்போது கொண்டுவந்துள்ள பயிற்சி முறை மூலம் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள், சாதாரண குழந்தைகளுடன் சேர்ந்து இயல்பாக இருக்கலாம்.

அரசு மருத்துவமனையில் காக்ளியர் இம்ப்ளான்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்குச் சிறப்புப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி காது, மூக்கு, தொண்டைச் சிகிச்சை பிரிவில் ஒரு பிரிவாகச் செயல்பட உள்ளது.

இதன்மூலம் காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளுக்கு அனைத்து சிறப்புப் பரிசோதனைகள் மற்றும் சிறப்புப் பேச்சு பயிற்சி ஆகிய அனைத்தையும் அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. மேலும் அறுவைசிகிச்சையும் செய்து அரசு மருந்துவமனை ஓர் ஒருங்கிணைந்த காக்ளியர் இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மையமாகச் செயல்பட உள்ளது” என்று ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டி கூறினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share