ADVERTISEMENT

மாதவன் நடிக்கும் ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு ‘ஜி.டி.என்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published On:

| By Mathi

GDN Moive

கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் மாதவனை ஆக்ரோஷம் கொண்டவனான ‘தம்பி’ படத்தில் சீமான் உருமாற்றினார். 2022-ல் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை திரைப்படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற பெயரில் மாதவனே இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் தேசிய விருதும் வென்றது.

ADVERTISEMENT

தற்போது மறைந்த கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘ஜி.டி.என்.’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share