மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு 1 லட்சம்!

Published On:

| By Balaji

கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ரூ. 1லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஜார்க்கண்ட் மாநில அரசு.

நேற்று (ஜூலை 10) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முதலமைச்சர் ரகுபர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் அரசின் செய்தித் தொடர்புத் துறை அதிகாரி, அம்மாநில சுற்றுலாத் துறையிடம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும், அதனைப் பூர்த்தி செய்து பக்தர்கள் அனுப்ப வேண்டுமென்றும் தெரிவித்தார்.

2018 – 19ஆம் ஆண்டுக்கான தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்துக்கு ஜார்க்கண்ட் மின் விநியோக நிறுவனம் வழங்கவேண்டிய நிலுவைத்தொகையைச் செலுத்துவதற்காக, ரூ.750 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share