Rபிஜிலி ரமேஷின் அடுத்த ரவுண்டு!

Published On:

| By Balaji

சமூக வலைதளங்களின் வாயிலாகப் பிரபலம் ஆன பிஜிலி ரமேஷ் தற்போது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சிலர் ஓவர் நைட்டில்கூட உலகளவிற்குப் பிரபலமாகும் போக்கு அதிகரித்துவருகிறது. அதைவிடவும் அப்படியாகப் பிரபலமாகிறவர்கள் உடனே சினிமாவிலும் அறிமுகம் ஆவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதுபோல பலபேர் ஏற்கெனவே சினிமாவில் என்ட்ரி ஆகிவிட்ட நிலையில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் பிஜிலி ரமேஷ்.

தன்னை ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகர் என அடையாளப்படுத்திக்கொண்டு இணையத்தில் பிரபலம் ஆனாரே அதே பிஜிலி ரமேஷ்தான். மேயாத மான் படத்தையடுத்து இயக்குநர் ரத்ன குமார் தற்போது ஆடை எனும் படத்தை இயக்கி வருகிறார். அமலா பாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் இந்தப்படத்தில்தான் நடிக்கிறார் பிஜிலி ரமேஷ்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான படம் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா. அந்த படத்தின் புரொமோஷனல் மியூசிக்கல் வீடியோவில் மட்டுமே இதற்குமுன் நடித்திருந்த பிஜிலி ரமேஷ் ஆடை படத்தின் வாயிலாகத்தான் ஒரு நடிகராக என்ட்ரி ஆகிறார்.

ஏற்கெனவே இணையங்களில் நன்கு அறிமுகம் ஆகிவிட்ட காரணத்தால் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share