rபணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய மார்க்

Published On:

| By Balaji

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக முன்னேறியுள்ளார்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான வாரன் பஃபெட் இருந்து வந்தார். தற்போது அவரைப் பின்னுக்குத் தள்ளி மார்க் சக்கர்பெர்க் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார். முதலிடத்தில் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோசும், இரண்டாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பில்கேட்சும் உள்ளனர். புளூம்பெர்க் நிறுவனத்தின் பணக்காரர்கள் பட்டியலின்படி, ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 2.4 விழுக்காடு உயர்ந்ததால் மார்க் சக்கர்பெர்க் இந்த வளர்ச்சியைக் கண்டுள்ளார். தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள் அனைவருமே தொழிநுட்பத்தை வைத்தே செல்வம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.

34 வயதான மார்க் சக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு தற்போது 81.6 பில்லியன் டாலராக உள்ளது. வாரன் பஃபெட்டின் நிகர சொத்து மதிப்பைவிட மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 373 மில்லியன் டாலர் கூடுதலாக உள்ளது. தகவல் கசிவு விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கியபோது அதன் பங்குகள் சரிவைச் சந்தித்தன. எனினும், முதலீட்டாளர்களின் தொடர் ஆதரவால் மார்க் தற்போது ஏற்றத்தைச் சந்தித்துள்ளார். ஒருகாலத்தில் உலக அளவில் மிகப்பெரிய பணக்காரராக இருந்த வாரன் பஃபெட் தற்போது பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்தச் சறுக்கலுக்கு, 2006ஆம் ஆண்டில் அவர் தொண்டுப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கிய சுமார் 290 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளும் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பங்குகளின் தற்போதைய மதிப்பு 50 பில்லியன் டாலருக்கும் மேலானதாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share