நீரிழிவு: நல்வாழ்வுக்கு எதிரி!

Published On:

| By Balaji

தினப் பெட்டகம் – 10 (14.11.2018)

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக (World Diabetes Day) கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோய் பற்றி:

1. டயாபடீஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நீரிழிவு நோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் ஒரு metabolic disorder.

2. எகிப்திய புராதனப் பதிவுகளில் காணக் கிடைக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று, நீரிழிவு நோய்.

3. உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கிறது.

4. 2030ஆம் ஆண்டில் நிகழும் மரணங்களுக்கு ஏழாவது முக்கியமான காரணமாக இது இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.

5. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன: டைப் 1 மற்றும் டைப் 2.

6. கண் பார்வை தெரியாமல் போவதற்கு, கை கால்களை அகற்றுவதற்கு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு நீரிழிவு நோயே முக்கியமான காரணமாக இருக்கிறது.

7. 2012ஆம் ஆண்டில் மட்டும், நீரிழிவு நோயின் நேரடித் தாக்குதலால் 1.5 மில்லியன் மக்கள் இறந்து போயினர்.

8. மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

9. 1991ஆம் ஆண்டு, சர்வதேச டயாபடீஸ் ஃபெடரேஷனும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, உலக நீரிழிவு தினத்தை முதன்முதலாகக் கொண்டாடினர்.

10. தற்போது 160க்கும் அதிகமான நாடுகளும், 230 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

**- ஆஸிஃபா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share