கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர் கார்னிவெல் விமான சேவை நிறுவனம் சர்வதேச தரத்திலான விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சியிலிருந்து சென்னை வரை புதிதாக மூன்று விமானங்களை இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மட்டுமே திருச்சி – சென்னை வழித்தடத்தில் விமான சேவையை வழங்கி வந்தது. எனவே இந்த வழித்தடத்தில் புதிதாக மூன்று விமானங்களை இயக்க ஏர் கார்னிவல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
70 இருக்கைகள் கொண்ட இந்த திருச்சி – சென்னை விமானம் தினமும் காலை 9.20 மணியிலிருந்து 9.40 வரை 20 நிமிடங்கள் திருச்சி விமான நிலையத்தில் நின்று சென்னைக்கு புறப்படும் என்றும், இதற்கு 3,399 ரூபாய் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஏர் கார்னிவல் நிறுவனம் தெரிவித்துள்ளது.