சென்னை அணியின் வெற்றி தொடருமா?

Published On:

| By Balaji

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (ஜனவரி 19) நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

கவ்காத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை, நார்த் ஈஸ்ட் அணிகள் ம,மோத உள்ளன. இந்த தொடரில் இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் சென்னையில் மோதிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 20 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் அணி 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நார்த் ஈஸ்ட் அணி வெற்றிபெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்ய முடியும். எனவே இன்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்த நார்த் ஈஸ்ட் அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் நார்த் ஈஸ்ட் அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது. இதனை சமாளித்து சென்னை அணி தனது வெற்றிப்பயணத்தை தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share