ஆர்.ஜே வாக இருந்து நடிகராக மாறியவர்களில் ரமேஷ் திலக்கும் ஒருவர். சூது கவ்வும் படத்தில் நடிகராக அறிமுகமான ரமேஷ், அறிமுக படத்திலேயே கவனிக்க வைத்தார். அதன்பின் டிமாண்டி காலனி, காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய் என அவர் நடித்த படங்களும் அவரது கதாபாத்திரத் தேர்வும் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை ஏற்படுத்திவிட்டது. போன வருடம் வெளிவந்த ஒருநாள் கூத்து அதனை மேலும் உறுதி செய்தது.
திரையிலும் ஆர்.ஜே வாக கலக்கிய ரமேஷ் திலக் நிஜ வாழ்விலும் தனக்கு, ஒரு ஆர்.ஜே-வை ஜோடியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருடன் சூரியன் எஃப்.எம்மில் பணியாற்றும் நவலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்கிறார். இதனை இருவரும் தங்களது சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர். சூரியன் எஃப்.எம்மில் ஆர்.ஜே வாக இருக்கும் நவலக்ஷ்மியின் தந்தை பிரபல சண்டை பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார்.
