பினிஷிங் குமாரு”ங்கிற பெயர் சும்மா எடுக்கலைடா’ன்னு நேத்தும் நிரூபிச்சுட்டாரு நம்ம தல தோனி. ரெண்டு மூணு நாளா அடிச்ச வெயில்னால திடீருன்னு பவுலிங் பிட்ச்சாக மாறிவிட்ட பெங்களூரு மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி அந்தா இந்தா என சுமாரான ஸ்கோரை எட்ட, அதன்பின்னர் வழக்கம் போல இந்திய பவுலர்களும், பீல்டர்களும் ரன்களை வாரி வழங்கினர். திக் திக் என நகர்ந்த மேட்ச்சில் வழக்கம்போலவே அலட்டிக்காமலே இருந்தார் தோனி. கடைசி ஒரு பாலில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என இருந்தது. டை ஆனாலும் ‘சூப்பர் ஓவர்’ கிடைத்துவிடும் பங்களாதேஷ் ஈசியாக வென்றுவிடும். இருந்தாலும் ஸ்டெம்பிங்கிற்கு தயாராக க்ளவுஸை கழட்டி காத்து இருந்தார். அப்புறமென்ன, வழக்கம் போலவே புலி வேஷம் போட்ட பங்களாதேஷ் ரசிகர்கள் அழுதுக்கிட்டே போனாங்க. தோனி ஹேட்டர்ஸ்கூட உணர்ச்சிவயப்பட்டு பாராட்டி ட்விட் போட்டாங்கன்னா பாருங்களேன். இன்னும் சொல்லனும்னா கருணாநிதியை திட்டிக்கிட்டே இருக்கும் அதிமுக சார்பு பேஸ்புக் குரூப்பில்கூட தேர்தல் மேட்டரை எல்லாம் மறந்து #தோனிடா என பொங்கிக்கொண்டிருந்தனர். கிரிக்கெட்டிலும் அரசியல் கலந்து நெட்டிசன்கள் போட்ட ட்விட்களும் ஸ்டேட்டஸ்களும்.
// @mekalapugazh
கிரிக்கெட்டின் கருணாநிதி…தோனி.//
//@gokila_honey
கடசில பந்துல போராடி ஜெயிக்க வெச்சா அது கேப்டன் தோனி
கடைசி நேரத்துல தள்ளாடி கூட்டணி வெச்சா அது கேப்டன் விஜயகாந்த்//
// @nagajothin
“தல” அப்படின்னு பேரு வச்சவன் எல்லாம் தன்னம்பிக்கையோட தான்யா இருக்கான்~!!!
“தல” அஜீத்~!!
“தல” தோனி~~!!
இவண்
சுறா விஜய் ரசிகர் மன்றம்~!! //
// @ShankarNaresh1
#தோனி கீப்பீங் நிக்கும்போது கன்னி வெடில கால வச்ச மாதிரி நிக்கனும், கால எடுத்த மவனே செத்தடா!!//
// @Araikurai 13h13 hours ago
ஏன்டா தோனி இப்ப போத எறங்கிப்போச்சே,சரக்குக்கு காசு உங்கொப்பனா குடுப்பான்
//
// Karthi Keyan
·
நேற்று நடந்த ஆட்டத்தைப் பார்த்தவுடன், இனி பாகிஸ்தான் – இந்தியா ஆட்டங்களைவிட, கிழக்கு பாகிஸ்தான் – இந்தியா ஆட்டங்களே களைகட்டும் எனத் தோன்றுகிறது. //
// விவேக் ஆனந்த்
10 hrs ·
தோனி இந்திய அணியின் சிறந்த கேப்டன் எனச் சொல்லக்கூடாது.
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலக வரலாற்றின் தலைசிறந்த கேப்டன்.
கிரிக்கெட் வரலாற்றின் ‘தலைசிறந்த 11’ தேர்ந்தெடுத்தால் அதில் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் தோனியாக மட்டுமே இருக்க முடியும் .
இந்த உலக கோப்பையை ஒருவேளை வெல்ல முடியாமல் போனாலும் 2019 உலக கோப்பை வரை தோனியே கேப்டனாக தொடர்வது இந்திய அணிக்கு நல்லது.
சச்சின்களும், கோலிகளும் இந்த தேசத்தில் உருவாகலாம். ஆனால் இன்னொரு தோனி உருவாவது கடினம்.
#MSD //
**********************************************************************************
வைகோவுக்கு நேத்துலர்ந்து ட்விட்டரில் மண்டகப்படி, உடன்பிறப்புகள் எல்லாம் செம காண்டிலும், அம்மா பிள்ளைகள் எல்லாம் “சோன முத்தா போச்சா போச்சா” என அவர்களைப் பார்த்து கலாய்த்துக்கொண்டும் உள்ளனர். ஸோ இன்னிக்கு வைகோ ஸ்பெசல் ட்விட்ஸ்:)
// @arattaigirl
மாங்கு மாங்குனு வைகோ பேசி ஓரளவு மக்கள் தெளிவாகறாப்ல நிலைல அடுத்தாப்ல கேப்டனை பேச விடுவாங்கல்ல… அது போதும் //
//@thirumarant
அடுத்தவங்களுக்கு ஸ்பேஸ் குடுக்கறதுல வைகோ ஒரு அரசியல் ’தல’ என்றால் அது மிகையாகாது//
// @nellaiseemai
#வைகோவின் மேடைப் பேச்சு, விவாதங்கள் எல்லாம் பார்க்கும்போது ஒரு நல்ல நாடக நடிகரை இழந்துவிட்டோம் என்று தோன்றும்.//
// @udanpirappe
தலைவர் நானாக இருக்கலாம், ஆனால் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோதான் -விஜயகாந்த் /
வைகோ -அப்போ நாம கெத்துதான …?
நல்லகண்ணு :த்தூ //
// // @zhilprabhu
விஜயகாந்த் வாசலில் காத்துக்கிடந்தார் கருணாநிதி -#வைகோ
அதை #விஜயகாந்தோட பாத்ரூம் வாசல்ல உக்காந்து இருந்த நீங்க சொல்லாதிங்கணே //
// @praburemya_
வைகோ: ம.ந.கூ யின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்தான்.
விஜயகாந்த் : என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ம.ந.கூ க்கு ஆழ்ந்த நன்றிகள் //
// @Satire_politics
வைகோ எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அதிமுக-வுக்கே சாதகம்: அமைச்சர் உதயகுமார் பேச்சு.
என்னையா ரகசியத்தை இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட ! //
//@MrElani
மேடைல வைகோ எதுக்கும் ரெண்டடி தள்ளி உக்காந்துக்கிறது நல்லது, கேப்டன் என்ன மூடுல இருப்பாருன்னு அவருக்கே தெரியாது, டப்புன்னு கை ஓங்கிடுவாப்ள//
// @get2karthik
இப்பத்தான் வைகோ முகத்துல டெபாசிட் வாங்கிடுவோம்ங்கற நம்பிக்கை வந்து இருக்கு.//
– லாக் ஆஃப்,”
