இலங்கையில் இந்திய வீரர் மரணம்!

By Balaji

|

Published on 7 Sep 2017, 12:00 AM

17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக 20 பேர் கொண்ட இந்திய அணி அங்குச் சென்றுள்ளது.

அந்த அணியில் இடம்பெற்றிருந்த குஜராத்தைச் சேர்ந்த 12 வயது இந்திய கிரிக்கெட் வீரர் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) இலங்கையில் உள்ள பமுனுகாமா இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். 12 வயதான அந்த சிறுவன் சக வீரர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel