கடந்த 2008ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நபர்களின் தேடல் கருவியாக Internet Explorer மற்றும் Firefox-களை பயன்படுத்தி வந்தனர். அதன்பின்னர் கூகுள் நிறுவனத்தின் புதிய Chrome என்ற அப்ளிகேஷன் வெளியிடப்பட்டு மிகப் பிரபலமாக பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கணினிகளுக்கு மட்டுமின்றி மொபைல்களுக்கும் இந்த அப்ளிகேஷன்கள் வெளியிடப்பட்டு அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் இடையே தோன்றும் சில விளம்பரங்களால் (Ads) சரிவர இணையத்தைப் பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் சிலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
தேவையற்ற விளம்பரங்களால் (Ads) மொபைல் டேட்டா வீணாவதாகவும், நேரம் வீணாகிறது என்றும் மேலும் தெரியாமல் ஏதேனும் விளம்பரத்தைத் தொடுவதால் ஏதேனும் சில சேவைகள் தேவையில்லாமல் தொடங்கப்படுவதாகவும் பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தவண்ணம் இருந்தனர். அதனால் இனி கூகுள் நிறுவனத்தின் Chrome பயன்படுத்தும் நபர்கள் எந்தவித தடையுமின்றி இணையத்தைப் பயன்படுத்தும்வகையில் Ad-blocking வசதியை Chrome அப்ளிகேஷனில் ஒரு வசதியாக வெளியிடவிருப்பதாக கூகுள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
