ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரான்னு ஏங்கிக்கிட்டு இருந்த அவரது ரசிகள் எல்லாம் ரிட்டயர்டு ஆகி வீட்டுல உட்கார்ந்த பிறகு, இப்ப தான் மெல்ல ரஜினி திருச்சி பக்கம் போயிருக்காரு. கூட்டிட்டு போக ஆள் துணை இல்லாம நிறைய ரசிகர்கள் வீட்டுலயே இருக்குறதா சொல்றாங்க. சரி அது இருக்கட்டும், ரஜினியை கூட்டிட்டு வந்துருக்காரே அது தமிழருவி மணியன் தானே சார். போன எம்.பி. எலெக்ஷன்ல கூட கேப்டனை கூட்டிட்டு போய் மோடியோட சேர்த்து விட்டு அதுக்கு அப்புறம் கேப்டன்னா யாருன்னு கேட்குற அளவுக்கு ஆனதே அவர் தானுங்களே அது. ரொம்ப சந்தோஷம் ராசிக்கார மனுஷன் தான். என்ன இருந்தாலும் ரஜினி அந்த வாடகை பணத்தை கொடுத்துருக்கலாம். அதை நம்ம ஆள்கள் பிடிச்சு கிளிச்சுக்கிட்டு இருக்காங்க. அதை நீங்களே பாருங்க.
**vishnut87**
லட்சக்கணக்கானபேரு அவரு அரசியலுக்கு
வருவாரா மாட்டாரான்னு எதிர்பாரத்துட்ருந்தப்போ,
ஒருத்தன் மட்டும் வாடகை தருவாரா மாட்டாரான்னு பாத்துருக்கான்
**amuduarattai**
சாப்பிடும் நேரத்தில் வரும், மனைவியின் உறவினர், பிரியாணி அரிசியில் எழுதப்பட்டு இருக்கும்,நம் பெயரை அழித்து விட்டு, அவர் பெயரை எழுதி விடுகிறார்

**saravananucfc**
ஹம்மிங்க்லயே போய் பாட்டின் மறந்த வரியை பிடிக்கிறதும், மைண்டை ஸ்டெப் பை ஸ்டெப்பா ரிவர்ஸ் பண்ணி மறந்து வச்ச பொருளை எடுக்குறதும் அழகான பழக்கம்.
**amuduarattai**
“ஒழுங்க படிக்கவில்லையெனில், உன்னை கவர்மெண்ட் ஸ்கூலில் சேர்த்துருவேன்” என்ற பெற்றோரின் குரல் ,நாட்டுக்கு நல்லதல்ல.
**Karthick**
‘தலைக்கு 500 ரூபாய் தந்தால் தலைவனாகி விட முடியாது
– ஜெயக்குமார்
அட ஆமால்ல தலைக்கு 10 கோடில கொடுக்கோணும்

**amuduarattai**
நோட்டு,புக் பேப்பரெல்லாம் மரமா இருந்தது என்று பையனிடம் சொல்லி இருந்தேன். நோட்டு,புக்ல தண்ணி ஊத்தி வச்சிருக்கு பையபுள்ள. மரம் வளர்கிறார் போல.
**ShivaP_Offl**
திங்கட்கிழமை மேனேஜரை பார்க்கும்போது பயங்கரமான கடுப்பும், வாரக்கடைசியில் அளவில்லாத பாசமும் வருகிறது!
**laksh_kgm**
பிச்சை எடுப்பதையும், திருடுவதையும் பிச்சைக்காரர்களும், திருடர்களும் மட்டும்தான் செய்வதாகப் பேசிக் கொண்டிருக்கிறோம் !

**kumarfaculty**
நகரத்தில் பெய்யும் மழை பெரும்பாலும் சாக்கடையை சுத்தம் செய்து விடுகிறது…!!!
**manipmp**
பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்
-அப்துல்ரகுமான்
**HAJAMYDEENNKS**
குழந்தைகள் இருப்பதால்தான் பலருக்கு டைவர்ஸ்கள் இல்லாமல் போயிருக்கின்றன…!
**senthilcp**
மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள் கிடைத்தன “- Cm Eps
# அப்டினு மோடி சொல்லச்சொன்னாரா?

**மெத்த வீட்டான்**
வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதவரிடமிருந்து SBI 235 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது – செய்தி #
வங்கியில் கொள்ளை என்பது இதுதானோ?
**senthilcp**
நடிகர் ரஜினிகாந்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்;
# அப்போ பாஜக இயக்குகிறது என்ற தகவல் பொய்யா?
**மெத்த வீட்டான்**
அதிமுகவில் உறுப்பினராக இல்லாத தீபா அந்த கட்சிக்காக உரிமை கொண்டாடுவது இதுவரை எந்த தெலுங்கு படத்திலும் கூட வராத சீன்…!

**amuduarattai**
-கந்து வட்டி தொழில் ஒழிக்கப்பட்டது.
-தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை அதிகமாகப்பட்டது.
#இரண்டும் தொடர்பு இல்லாத, வெவ்வேறு செய்திகள்.
**yugarajesh**
வாரணாசியில் மோடியை காணவில்லை என சுவரொட்டியால் பரபரப்பு
#அப்படியே மேல அண்ணாந்து வானத்தை பாருங்க பறந்துக்கிட்டு இருப்பாப்டி..!!
**மெத்த வீட்டான்**
எடப்பாடி பழனிசாமி வீட்டிலிருந்து ஓபிஎஸ் வீடுவரைக்கும் ஃபெவிகால் வைத்து ஒட்டி முடிந்த பிறகே அணிகள் இணைப்பு நடக்கும் – செல்லூர் ராஜூ !

**amuduarattai**
நூடுல்ஸ் சாப்பிட்டால், எத்தனை சிக்கல்கள் வரும் என்பதை தான், நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள சிக்கல்கள், நமக்கு சிம்பாலிக்காக உணர்த்துகின்றன.
**senthil**
40 ஆண்டு கால அதிமுக பிளவுபட, பாஜக விரும்பவில்லை – பொன்.ராதா
# காயத்ரி மாதிரி மனசு ,ஓவியா போல் நடிப்பு. ஜனங்க நம்பனுமே?
**manipmp**
மதிய காக்கையே மன்னித்துவிடு
இன்று எங்கள் வீட்டில்
“சைவம்”!
**kumarfaculty**
ஞாயிற்றுக்கிழமை மனிதர்களுக்கு கறிநாள். ஆடு, கோழிகளுக்கு கரிநாள்…!!!
**vishnut**
இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார் – தமிழருவி மணியன்…
என்ன.. நாராயண சாமி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாரு..

**நக்கல் மன்னன் 2.0**
ராகுல் வந்து பார்வையிட கோராக்பூர் ஒன்றும் சுற்றுலா தளம் அல்ல – யோகி
ஆமா அதை தான் சுடுகாடா மாத்திட்டீங்களே
**sundar**
வாடகையை இஷ்டத்துக்கு ஏத்துற சிஸ்டம் சரியில்லன்னு தான் தலைவர் பீல் பண்ணியருக்கார்
**senthilcp**
எந்த கட்சிக்கும் வளர்ப்பு தந்தையாக இருக்க பாஜக விரும்பவில்லை-பொன்னார்
# வளர்ப்பு சித்தப்பா ஓகே,வா? மேட்ச் ஆகும்
**Scientist**
அடுத்த புதிய இந்தியாவின் தலைப்பு செய்தி இப்படி கூட இருக்கலாம்
ஏழுஅடுக்கு பாதுகாப்புடன், அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் – இந்திய பிரதமர்
-லாக் ஆஃப்










