கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு 1 சதவிகிதம் மட்டுமே உயர்வடைந்துள்ளதாகவும், சென்னையில் வேலைவாய்ப்பு 11 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் நவ்கரி.காம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வேலைவாய்ப்புச் சேவைகளை வழங்கிவரும் [நவ்கரி.காம்](https://www.naukri.com/) இணையதளம், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற பணி நியமனங்கள் மற்றும் ஆட்கள் தேர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி மாதத்தில் இந்திய தொழில் நிறுவனங்களின் ஆட்கள் தேர்வு நடவடிக்கை ஒரு சதவிகித உயர்வுடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், முந்தைய ஜனவரி மாதத்தைக் காட்டிலும் வேலைவாய்ப்பு 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரத் துறைகளில் வேலைவாய்ப்பு 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ. துறைகள் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 21 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. அதிகமான வேலைவாய்ப்பு வழங்கிய பகுதியாக (20%) டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியைத் தொடர்ந்து மும்பை (14%), பெங்களூரு(12%) ஆகிய நகரங்கள் உள்ளன. 11 சதவிகித உயர்வுடன் சென்னை நான்காம் இடத்தில் உள்ளது.
,”









