அடுத்தடுத்த சர்ச்சையில் வைகோ!

Published On:

| By Balaji

நேற்றுதான் வைகோ தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கும்போது பதில் சொல்ல மறுத்து எழுந்து சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் இன்று மீண்டும் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வைகோ வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். கேள்வியின் போது, மக்கள் நலக் கூட்டியக்கம்” என்ரு நிருபர்கள் குறிப்பிட்டனர். ஆனால், வைகோ இதை பொருட்படுத்தாது பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். வைகோ சென்றபிறகு, வைகோவுடன் காரில் வந்த வழக்கறிஞர் ஒருவர் “எப்படி நீங்கள் மக்கள் நலக் கூட்டணியை, கூட்டியக்கம் என்று சொல்லலாம்” என்று கேட்டுக்கொண்டிருந்தார். திடீரென திரும்பி வந்த வைகோ, “ஏற்கனவே ஊடகங்கள் எங்களை குத்திக் குதறவேண்டும் என காத்துக்கொண்டிருக்கின்றன. ஊடகங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் நீ எதற்கு அவர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறாய்? இனி என் வண்டியில் யாரும் என்னோடு ஏறக் கூடாது” என்று சத்தம் போட்டார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share