உக்ரைன் சென்ற ரஷ்ய அதிபர் புதின்

Published On:

| By Selvam

போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புதின் சென்றுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று (மார்ச் 20) 390-ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ADVERTISEMENT

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதனிடையே, இந்த போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார்.

ADVERTISEMENT

போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு நேற்று (மார்ச் 19) ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார். மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது.

தற்போது மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.

ரஷ்யாவுக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் இந்தப் பயணம் உக்ரைன் – ரஷ்யா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஐயப்பன் ராமசாமிக்கு மிரட்டல்: டிடிஎப் வாசன் மீது வழக்கு!

கிச்சன் கீர்த்தனா: சில்லி பனீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share