சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ், உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் நேற்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதனிடையே பேச்சுவார்த்தையில் கேட்ட தொகுதிகள் ஒதுக்காததாக கூறி புதிய நீதிக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.