– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடும். உடனிருப்போர் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு வரும்.
இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை தீரும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. எதிர்பாலருடன் எல்லை வகுத்துப் பழகுங்கள்.
செய்யும் தொழிலில் லாபம் தொடரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நிதானம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவு உண்டு.
கலை, படைப்புத் துறையினர் சீரான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். படைப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். மாணவர்கள் திறமை பளிச்சிடும். பயணத்தில் உடைமை பத்திரம். மன அழுத்தம், அல்சர் உபாதைகள் வரலாம். காணிப்பாக்க கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அஸ்வினி! (17.9.2024 முதல் 17.10.2024 வரை)
புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… என்ன காரணம்?
டிஜிட்டல் திண்ணை: பெரியார் திடல் விசிட்… முப்பெரும் விழா தினத்தில் விஜய் ரகசிய ஆபரேஷன்!
ப்ரோ என் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு