வீக் எண்ட் விருந்தாக என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த பஞ்சாபி சிக்கன் கறி. மதிய உணவுக்கு மட்டுமல்ல… இரவு உணவுக்கும் ஸ்பெஷல் சைடிஷாக இது அமையும்.
என்ன தேவை? Punjabi Chicken Curry Recipe
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
பெங்களூர் தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 3 அல்லது 4
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியா) – 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 15 (பேஸ்ட்டாக அரைக்கவும்)
தேங்காய் – அரை மூடி (அரைக்கவும்)
கெட்டியான தயிர் – அரை கப்
புதினா – சிறிது
கொத்தமல்லித் தழை – சிறிது
சர்க்கரை – ஒரு பிஞ்ச்
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – 50 மில்லி
எப்படிச் செய்வது? Punjabi Chicken Curry Recipe
முந்திரியை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து வைக்கவும். சிக்கனை கழுவி மீடியம் சைஸில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இத்துடன் முந்திரி பேஸ்டில் பாதி, பாதியளவு இஞ்சி – பூண்டு பேஸ்ட் கலந்து இருபது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சீரகம், போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் மீதம் இருக்கும் இஞ்சி – பூண்டு விழுது, முந்திரி பேஸ்ட், தக்காளி சேர்த்து தீயை மிதமாக்கி மைய வதக்கவும். கூடவே மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியா) சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இதில் அரைத்த தேங்காய், ஊறிய சிக்கன், உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் புதினா இலைகளை சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து சர்க்கரை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.