மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ். punjab kings thrash mumbai and move to 1st place
ஜெய்ப்பூர் மான்சிங் மைதானத்தில் இன்று (மே 26) நடைபெற்ற 69வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
கட்டாயம் வென்றாக வேண்டிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மட்டும் அரைசதம் (57) அடித்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங், ஜேன்சன், விஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் குவித்தனர்.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிராப் சிம்ரன் தடுமாறிய நிலையில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு துவக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் மும்பை அணியின் பவுலர்களை தண்டித்தார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டர் மற்றும் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் குவித்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் (26) சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

9 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி 19 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றில் முதல் குவாலியர் போட்டியில் விளையாடும் முதல் அணியாக பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது.
’