சிஎஸ்கேவை தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ்!

Published On:

| By Kavi

ஐபிஎல் 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியைத் தோற்கடித்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டி நடந்து வரும் நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவும், பஞ்சாப் கிங்ஸும் மோதின.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது சென்னை அணி.

கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பஞ்சாப் அணி களமிறங்கியது. அணியின் கேப்டன் ஷிகர் தவான் 28 ரன்களுடன் வெளியேறினார்.

பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் – சாம் கரன் இணை ஸ்கோரை உயர்த்தியது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் என்ற நிலையிலும் கடைசி பந்தில் 3 ரன்கள் என்ற நிலையிலும் இருந்த பஞ்சாப் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டு ரசித்தார். சென்னை அணி தோற்றதால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிரியா

ஏசி பயன்படுத்தினால் கூடுதல் மின் கட்டணமா?

டிஜிட்டல் திண்ணை:  பாஜக கூட்டணி-  மாசெக்களிடம் தனித்தனியே கருத்து கேட்கும் எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share