ஒரே நாளில் பஞ்சாப், கொல்கத்தா அணிகள் செய்த வரலாற்று சாதனை!

Published On:

| By christopher

punjab kings and kkr set the history in ipl 2025

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 4) ஒரே நாளில் இரு போட்டிகள் நடந்தன. மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் கேகேஆர் – ராஜஸ்தான் அணிகள் மோதின. punjab kings and kkr set the history in ipl 2025

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 206 ரன்கள் குவித்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் 20 ரன்களுடன் 205 ரன்கள் மட்டுமே குவித்தது. punjab kings and kkr set the history in ipl 2025

இதனால் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது கொல்கத்தா அணி.

ADVERTISEMENT

இதன்மூலம் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை கேகேஆர் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இதே ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் ஆர்.சி.பி அணியை 1 ரன்னில் கொல்கத்தா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. punjab kings and kkr set the history in ipl 2025

ADVERTISEMENT

பஞ்சாப் அணி அபாரம்! punjab kings and kkr set the history in ipl 2025

தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 236 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.

அதிகபட்சமாக பிராப்சிம்ரன் 91 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து விளையாடிய லக்னோ அணியில் ஆயுஷ் பதோனி (74) மற்றும் அப்துல் சமத் (45) தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

11 வருடங்களுக்கு பிறகு… punjab kings and kkr set the history in ipl 2025

இதனால் அந்த அணி 199 ரன்கள் மட்டுமே குவிக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு அந்த அணி 15 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது பெற்றுள்ளது பஞ்சப் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share