இறுதிக்கட்டத்தினை எட்டிய ‘புரோ கபடி’ வெற்றி மகுடம் யாருக்கு?

Published On:

| By Minn Login2

puneri paltan vs patna pirates semi final

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய 10-வது புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.

நேற்றிரவு (பிப்ரவரி 29) ஹைதராபாத்தின் கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தானை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனேரி அணி 2 முறை பாட்னாவை ஆல் அவுட் செய்ததுடன்,  37-21 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியும் பெற்றது.

ADVERTISEMENT

இந்த வெற்றியின் மூலம் புனே அணியானது தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புனேவை பொறுத்தவரை அதிகபட்சமாக கேப்டன் அஸ்ஸாம் முஸ்தபா, பங்கஜ் மொஹித் இருவரும் தலா 7 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

puneri paltan vs patna pirates semi final

ADVERTISEMENT

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஹரியானா ஸ்டீலர்சுடன் மல்லுக்கட்டியது. இந்த மோதலில் முதல் பாதியில் இருந்தே ஹரியானாவின் கை ஓங்கி இருந்தது (19-21 புள்ளிகள்). ஆட்டத்தின் பிற்பாதியில் சரிவில் இருந்து மீள்வதற்கு ஜெய்ப்பூர் அணி கடுமையாக போராடியது. என்றாலும் அதற்கு தகுந்த பலன் கிட்டவில்லை.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் ஹரியானா 31-27 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூருக்கு தோல்வியை பரிசாக அளித்து, முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ADVERTISEMENT

இந்த உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை (மார்ச் 1) இரவு 8 மணிக்கு நடக்கும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் புனேரி – ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிவாகை சூடி கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

-கவின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடிக்கு தோல்வி பயம்: ஸ்டாலின் தாக்கு!

சீனா கொடி சர்ச்சை : அனிதா ராதா கிருஷ்ணன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share