PULSE க்கும் PILES க்கும் வித்த்தியாசம் தெரியாத கூல்

Published On:

| By Minnambalam Desk

Pulse Movie Teaser and Audio Launch

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் நவீன் கணேஷ் இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் படம் பல்ஸ்.

படத்தின் விளம்பர நிகழ்வில் நடிகர் கூல் சுரேஷ் பேசும் போது,“இந்த படத்தில் நான் நடிக்கத் தொடங்கிய போது, படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. பின்னர் இயக்குனர் நவீன் சார் வாட்ஸ் அப்பில் படத்தின் ஸ்டில் அனுப்பியபோது, ஆங்கில அறிவு குறைவினால் படத்தின் பெயரை ‘Pulse’ என்பதற்கு பதிலாக ‘Piles’ என்று தவறாக புரிந்து கொண்டேன்”என்றார்..

ADVERTISEMENT

நடிகை அர்ச்சனா “மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை தாயாக மாற்றும் அடிப்படை. அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக கூல் சுரேஷ் அண்ணன் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது,” என்றார்.

‘பல்ஸ்’,“படத்தின் ட்ரைலர் மிகவும் வலுவாகவும் பரபரப்பாகவும் இருந்தது. கதாநாயகன் மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் காட்டிய உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் செய்த துணிச்சலான முயற்சிகள் வியக்கத்தக்கவை, முதல் படத்திலேயே இவ்வளவு வலுவான ஹாஸ்பிட்டல் த்ரில்லர் கதையை நவீன் சந்திரா எடுத்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

ADVERTISEMENT

நடிகர் சேது பேசும்போது,”இயக்குனர் நவீன் கணேஷ் எனக்கு நீண்ட நாட்களாக தெரிந்தவர். இந்த கதையை அவர் சொன்னபோதே இது ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தது.மியூசிக் டைரக்டர் த்ரில்லர் படத்துக்கு தேவையான சரியான பிஜிஎம்ஐ கொடுத்திருக்கிறார். பின்னணி இசை படத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது” என்றார்.

இயக்குனர் நவீன் கணேஷ் “ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார்..ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும்,” என்றார்..

ADVERTISEMENT

கூல் சுரேஷின் PILES சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, படத்தின் தலைப்பு குறித்து விளக்கிய நவீன் கணேஷ்,

“இது ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம்,” என்றார்.

நடிகர் மகேந்திரன், “ஒரு ரியல் ஹாஸ்பிட்டல் போலவே தோன்ற வேண்டும், அதே நேரத்தில் ஷூட்டிங்கிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த சவாலான பணியை ஆர்ட் டைரக்டர் முகமது மிக நேர்த்தியாக செய்துள்ளார்.ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா அளித்த தைரியமும் பாதுகாப்பும் காரணமாக, கிளைமாக்ஸ் காட்சிகளை இயல்பாக செய்ய முடிந்தது. அந்த முழு நம்பிக்கை அவருக்கே,”என்றார்

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share