கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி – புளி உப்புமா கொழுக்கட்டை

Published On:

| By Selvam

Puli Upma kuzhakattai Recipe

கலோரி அதிகமான உணவு இந்த ஜவ்வரிசி – புளி உப்புமா கொழுக்கட்டை. எளிதில் செரிமானமாகும். இந்த வீக் எண்டில் காலை, மதியம், இரவு என எல்லா வேளையிலும் சாப்பிடலாம். குழந்தைகள், முதியவர்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போன்றவை சேர்ப்பதால், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

ஜவ்வரிசி – ஒரு கப் ( மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்)
புளிக்கரைசல் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – சிறிது
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் உரித்து, மசித்துக்கொள்ளவும்)
கடுகு, கறிவேப்பிலை – ஒரு டீஸ்பூன், மல்லித் தழை – அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊறிய ஜவ்வரிசி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளவும். இதனுடன், மசித்த உருளைக்கிழங்கைப் போட்டுப் பிரட்டி, புளிக்கரைசல் விடவும். ஒரு கொதிவந்து சுண்ட ஆரம்பித்தவுடன், அடுப்பை அணைத்துக் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.

கீரை வெஜ் ஆம்லெட்

ADVERTISEMENT

7 ஸ்டார் தோசை

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share