தமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபா எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. puhazhendi approach eci aiadmk
இந்தநிலையில், ஜூன் 19-ஆம் தேதி 6 ராஜ்யசபா எம்.பி-க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக – 4, அதிமுக – 2 என்ற அடிப்படையில் எம்.பி-க்கள் கிடைக்கும். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், திமுக, அதிமுக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில், வேட்பாளரை நிறுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக உரிமை மீட்பு குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி மற்றும் வழக்கறிஞர் சூர்யகுமார் ஆகியோர் தனித்தனியாக இன்று (மே 27) இரண்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “அதிமுக பொதுக்குழு விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருப்பதால், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. மாநிலங்களவை தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. puhazhendi approach eci aiadmk
