கிச்சன் கீர்த்தனா: பஃப்டு ரைஸ் ஸ்நாக்!

Published On:

| By Monisha

Puffed rice snack Recipe

விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக இந்த பஃப்டு ரைஸ் ஸ்நாக் செய்து தரலாம். இதில் கலோரியும், கொழுப்பும் குறைவு என்பதால் அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.

என்ன தேவை?

ADVERTISEMENT

அரிசிப் பொரி – ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு
வேகவைத்து, தோல் நீக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளரி – தலா கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி – தலா 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

மசாலாவுக்கு…

ADVERTISEMENT

வறுத்து அரைத்த சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
எலுமிச்சை – கால் துண்டு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில், பொரி, வேர்க்கடலை, நறுக்கிய வெள்ளரி, தக்காளி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, மசாலாப் பொருட்கள், எண்ணெய், உப்பு மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து கிளறி, கொத்தமல்லி தூவி, பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கிரில்டு கார்ன்!

கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share