புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: மக்கள் அவதி!

Published On:

| By Minnambalam

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி இன்று(டிசம்பர் 28) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனியார் பேருந்துகளும் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்திருந்தது. இதற்கு வணிகா்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், புதுவையில் காலை முதல் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி அதிமுக செயலாளர் ஏ.அன்பழகன் உள்பட 15 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: கருப்பட்டி முட்டை புடிங்

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share