புதுச்சேரியிலும் தவெக ஆட்சி – புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் முதல்வராக வருவார் என புதுச்சேரியில் நடந்த தவெக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று ( டிசம்பர் 9) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக 2026 இல் வருவார். அதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக அமையும். 72 நாட்கள் கழித்து இது மாதிரியான பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் நம்மை எங்கும் விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.

விஜய் கூறியதை போல அவர்கள் எது செய்தாலும் காற்றை மறைக்க முடியுமா? எதுவுமே செய்ய முடியாது. தலைவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

ADVERTISEMENT

நான் உச்சத்தில் இருக்கும் போதே மக்களுக்கு நல்லது செய்வேன் என கூறிய ஒரே தலைவர் விஜய் தான். புதுச்சேரி மக்களும் , தமிழக மக்களும் விஜய் மீது அதிக பாசம் காட்டுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள்தான் உள்ளன. தமிழகத்தில் 2026 விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதை போலவே புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைய உழைப்போம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share