புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 12-க்கு திறப்பு; தமிழகத்தில் எப்போது?

Published On:

| By Kavi

புதுச்சேரியில் நிலவும் வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் திறப்பும் வெப்ப அலையின் காரணமாக தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்திருந்தது.

நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு நாளில் நோட்டு புத்தகங்கள் சீருடை தர திட்டமிட்டு பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில், புதுச்சேரியில் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகளவில் உள்ளது. இதனால், கல்வித்துறை பள்ளிகள் திறப்பை ஜூன் 6-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள உத்தரவில்,

‘புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும், வெப்ப அலை காரணமாக வரும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,

“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 2024 – 2025-ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது தமிழகம் முழுவதுமே வெப்ப அலை தொடர்வதால் புதுச்சேரியைப் போலவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் திறப்பும் ஜூன் 12-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பாகற்காய்- வேர்க்கடலைக் குழம்பு!

இசை விழாவிற்கு தயாரான இந்தியன் 2: எப்போது தெரியுமா?

‘கருடன்’, ‘கல்கி’ அனிமேஷன் சீரிஸ்… இந்த வார தியேட்டர் ஓடிடி லிஸ்ட் இதோ!

மழை வர போகுதே – வானிலை மையம் கூல் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share