பெண்களுக்கு இனி மாதம் ரூ.2,500… புதுவை பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Published On:

| By Selvam

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்றைய தினம் (மார்ச் 11), ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். Puducherry budget rangasamy announcement

இந்தநிலையில், 2025 – 2026-ஆம் நிதியாண்டிற்கான ரூ.13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2,500-ஆக வழங்கப்படும்.

மழைக்கால நிவாரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.

வாரம் மூன்று நாட்கள் வழங்கப்படும் முட்டை, இனிமேல் வாரம் முழுவதும் வழங்கப்படும்.

ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன் இலவச முட்டை வழங்கப்படும்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

முதியோர் உதவி தொகை பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால், ஈமச்சடங்கு தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

புதுவையில் உள்ள இரண்டு அருங்காட்சியகங்கள் மத்திய அரசு உதவியுடன் புனரமைக்கப்படும். Puducherry budget rangasamy announcement

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share