புதுச்சேரி: விஜய் அறிவித்த தவெக வேட்பாளர்களில் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்கள், 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்- முழு விவரம்!

Published On:

| By Mathi

TVK Candidates EX MLAs

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 30 தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்தார்.

விஜய் அறிவித்த 30 வேட்பாளர்களில் 2 பேர் சிட்டிங் எம்.எல்.ஏக்கள், 4 பேர் முன்னாள் எம்.எல்.ஏக்கள்.

ADVERTISEMENT

முத்தியால்பேட்டை பிரகாஷ் குமார்

2021 தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜே. பிரகாஷ் குமார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் வையாபுரி மணிகண்டனை தோற்கடித்தார்.

ADVERTISEMENT

2026 தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளராக பிரகாஷ்குமார் போட்டியிடுகிறார். அதிமுகவில் தமக்கு சீட் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைந்துள்ளார் வையாபுரி மணிகண்டன.

பாகூர் தனவேலு

ADVERTISEMENT

2016 தேர்தலில் பாகூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் தனவேலு. ஆனால் காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டதால் 2020-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் தனவேலு. பின்னர் என்.ஆர். காங்கிரஸில் இணைந்த தனவேலு, 2021 தேர்தலில் மீண்டும் பாகூர் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது தவெக வேட்பாளராக மீண்டும் பாகூர் தொகுதியில் தனவேலு போட்டியிடுகிறார்.

காரைக்கால் தெற்கு கே.ஏ.யூ. அசனா

2016-ம் ஆண்டு காரைக்கால் தெற்கு சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் அசனா. 2021 தேர்தலில் திமுகவின் நாசீமிடம் அசனா தோல்வியைத் தழுவினார். கடந்த ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் அசனா. தற்போது 3-வது முறையாக காரைக்கால் தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்.

லாஸ்பேட்டை- சாமிநாதன்

புதுச்சேரி மாநில பாஜக மாநில தலைவராக 3 முறை பணியாற்றியவர் சாமிநாதன். பாஜகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் சாமிநாதன்.

2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நியமன எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தவர் சாமிநாதன்.

2021 தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதனிடம் தோல்வியைத் தழுவினார். பின்னர் கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தற்போது லாஸ்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் சாமிநாதன்.

திருபுவனை ஏ.கே.. சாய் ஜே. சரவணன் குமார்

புதுச்சேரி அரசியலில் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சாய் ஜே. சரவணன் குமார். 2021-ம் ஆண்டு ஊசுடு தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் சாய் ஜே. சரவணன் குமார். புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது திருபுவனை (தனி) தொகுதியில் ஏ.கே.. சாய் ஜே. சரவணன் குமார், தவெக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

நெட்டப்பாக்கம் (தனி): எல். பெரியசாமி

011-ம் ஆண்டு நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் எல். பெரியசாமி. 2016-ம் ஆண்டு மீண்டும் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பெற்று தோல்வி அடைந்தார். தற்போது தவெக வேட்பாளராக மீண்டும் நெட்டப்பாக்கம் தொகுதியில் களம் காண்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share