நம் உணவில் கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் மழைக்காலத்துக்கேற்ற உணவாக இந்த சுண்டைக்காய் சூப் செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
பொடியாக நறுக்கிய கால் கப் வாழைத்தண்டை மோரில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். வாணலியில் சிறிதளவு வெண்ணெயைப் போட்டு பொடியாக நறுக்கிய அரை கப் சுண்டைக்காயுடன் வாழைத்தண்டையும் சேர்த்து வதக்கி இரண்டு கப் நீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இரண்டு டேபிள்ஸ்பூன் பயத்தம்பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு கரண்டியால் நன்றாக மசித்த பிறகு, கால் கப் தேங்காய்ப்பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் சோளமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி இறக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.
**சிறப்பு**
சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த உற்பத்தியை மேம்படுத்தும். பயத்தம் பருப்பில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலுக்கு வலுவூட்டும். வாழைத்தண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறுநீரகக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும்.
�,