தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவக் காற்றால் மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அடுத்த 2 அல்லது 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 59 மி.மீ மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 51 மி.மீ மழையும், நேற்று (ஜூலை 15) இரவு மட்டும் கொட்டி தீர்த்துள்ளது. மைலாப்பூர் அருகில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் 49 மி.மீ மழையும், மாம்பலம் அருகே 42.40 மி.மீ மழையும், அயனாவரத்தில் 42 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 37 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதைபோல், அம்பத்தூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”