z8 மணி நேரத்திற்கு கார் ஓட்டினால் உரிமம் ரத்து!

public

நாள் ஒன்றிக்கு 8 மணி நேரத்திற்கு மேல் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் நேற்று (டிசம்பர் 06) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகுந்த கவலையளிக்கிறது. சாலை விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 218 பேரும், 2017ஆம் ஆண்டில் (அக்டோபர் வரை) 14 ஆயிரத்து 077 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் 90 சதவிகித சாலை விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் உண்டாகும் விபத்துக்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுற்றுலா பேருந்துகளும், சுற்றுலா வாகனங்களும் அதிக விபத்துக்குள்ளாவதாகத் தெரியவந்துள்ளது.

சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் விதமாக 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 ல் குறிப்பிட்ட சட்ட வரையறைகளை கடைப்பிடிக்குமாறு தகுந்த அறிவுரைகள் சாலை பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நாள் ஒன்றிக்கு 8 மணி நேரத்திற்கு மிகாமலும், ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் மற்றும் வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்குதல் வேண்டும்.

சுற்றுலா வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்களை ஒரு பணி முடிந்ததும் தொடர்ச்சியாக அடுத்த பணிகளை செய்ய வலியுறுத்தக் கூடாது. ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை மற்றும் தனி நபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும். சட்டவிதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாகத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதிச் சீட்டு மற்றும் தகுதிச்சான்றுகள் போக்குவரத்துத் துறையினரால் புதுப்பிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் பொருட்டு சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும்’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *