zவேல்முருகன், திருமுருகன் மீது வழக்குப்பதிவு!

Published On:

| By Balaji

d

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒரு சமூகத்தினருக்கு எதிராக வன்மத்தை தூண்டும் விதமாக பேசியதாக வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையின் அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சமூகத்தினருக்கு எதிராக வன்மத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் பேசியதாக வேல்முருகன் மற்றும் 20 பேர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் நேற்று 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று 2018ஆம் ஆண்டு மே மாதம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமும் காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும் கலந்துகொண்டு பேசினார். அதிலும் ஒரு சமூகத்தினருக்கு எதிராக வன்மத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் பேசியதாக திருமுருகன் காந்தி, வேல்முருகன் மற்றும் 10 நபர்கள் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் நேற்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share