zவெறும் முயற்சியால் மட்டும் முன்னேற முடியாது!

Published On:

| By Balaji

வெறும் முயற்சியால் மட்டும் முன்னேற முடியாது என்று குறிப்பிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், வாழ்க்கையில் முன்னேற ஆண்டவன் அருளும் தேவை என்று கூறியுள்ளார்.

கட்சி தொடங்குவேன் என்று குறிப்பிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த மார்ச் மாதம் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் அழைப்பின் பேரில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அங்கு, எம்.ஜி.ஆரின் நல்லாட்சியைத் தருவேன்” என்றும் “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தலைமை வெற்றிடத்தை நிரப்புவேன்” என்றும் கூறினார். இது விவாதப் பொருளாக மாறியது. அதன்பின்பு ரஜினி மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம், ஆலோசனைக் கூட்டம் எனத் தொடர்ந்து மன்ற வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டன,

இந்த நிலையில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அதே ஏ.சி.சண்முகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்ட நிலையில், அதற்காக நேற்று கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், “அனைவரின் இதயத்திலும், மனதிலும், ஜீவனிலும் ஆண்டவன் இருக்கிறான். ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். அதனைச் செய்தாலே ஆண்டவனுக்குச் செய்த புண்ணியம் கிடைக்கும். இங்கிருக்கக்கூடியவர்கள் அனைவருமே உழைப்பாளிகள். நன்றாக உழைத்தவர்கள் அனைவருமே முன்னேறிவிட முடியாது. வெற்றியும் பெற்றுவிட முடியாது.

வெற்றியடைய வேண்டும், நிறைய பணம் மற்றும் பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் உழைக்கிறார்கள். ஆனால், வெறும் முயற்சியால் உழைப்பால் மட்டும் முன்னேற முடியாது. உழைப்புடன் ஆண்டவன் அருளும் தேவை. அதனுடன் நல்ல எண்ணமும் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share