zமோடி பதவியேற்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

Published On:

| By Balaji

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று இந்திய அளவில் 353 இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. அக்கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மாலை 7 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்கவுள்ளார்.

பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அண்டை நாட்டுத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விவகாரங்களில் கூறிய கருத்துக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தன. மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காத அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நதிகள் இணைப்புத் திட்டத்தை மட்டும் வரவேற்றிருந்தார். மேலும், இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு, ‘சாதித்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது தர்பார் படப்பிடிப்பில் இருந்துவரும் ரஜினிகாந்த், பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என்றே கூறப்படுகிறது.

இதுபோலவே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் கலந்துகொள்வது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மக்களவைத் தேர்தலின்போது பாஜகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்தார். பதிலுக்கு பாஜகவும் விமர்சனம் செய்தது. கமல்ஹாசன் கூறிய ‘இந்து தீவிரவாதி’ கருத்துக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கமல்ஹாசன் பாஜகவின் ‘பி’ டீம் என்று விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், தான் நேர்மையின் ‘ஏ’ டீம் என்று பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டால் தேவையற்ற விமர்சனங்கள் எழலாம் என்பதால், அவர் கலந்துகொள்வது கேள்விக் குறியாகியுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share