Zமீ டூ: பயமில்லாமல் சொல்ல வேண்டும்!

public

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்வது மிகவும் அவசியம் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை சமூக வலைதளங்களில் *மீ டூ* என்ற ஹேஸ்டேக் வழியாக இயக்கமாகப் பெண்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த முன்னெடுப்புக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் சூழலில் இந்தியப் **பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்** மீ டூ இயக்கத்தைத் தானும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து *ஃபர்ஸ்ட்போஸ்ட்* ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பை உருவாக்க இந்த இயக்கம் அவசியம். ஒப்புதல் என்பது முக்கியமான வார்த்தை, ஆனால், இந்த வார்த்தையை இன்னும் கூட பலர் புரிந்துகொள்ளவில்லை.

யாரேனும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானால், மக்கள் அதை எப்படிப் புரிந்துகொள்ளுவார்கள் என்று கருதாமல், அதற்கெதிராக எழுந்து நிற்க வேண்டும். அவர்கள் அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்ட ஒருவர் தைரியத்தை வரவழைத்துத் துணிவாகவும், நம்பிக்கையோடும் அதைப்பற்றி பேச வேண்டும். அது உண்மையாக இருந்தால், அப்படியே இருக்கட்டும். அந்த நாளின் முடிவில் ஒரு சுயமரியாதையும், கண்ணியமும் கிடைக்கும்.

ஒரு பெண்ணாக, பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகக் கட்டாயம் துணை நிற்பேன். ஆனால், அடையாளம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைப்பவர்களுக்குத் துணை நிற்க மாட்டேன். அத்தகைய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வது சாத்தியமற்றது. இந்த மீ டூ இயக்கமானது அரசியலாகவோ, பொய்க் குற்றச்சாட்டுகளுடனோ அல்லது தனிநபர்களுக்கு எதிராகவோ பயணிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *