}கடந்த 30ஆம் தேதி முதல் தென்னிந்தியாவில் லாரி உரிமையாளர்கள், லாரிகளுக்கான 3ஆம் நபர் காப்பீடு கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களான தக்காளி, வெங்காயம் ஆகிய பொருட்களின் விலை ஏறத் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை கைவிடக்கோரி, ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் (08-04-2017), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்
காய்கறிகளின் விலையேற்றம் குறித்துப் பேசிய வியாபாரி மக்புல் அகமது கூறுகையில், ‘ஆறு நாள் காய்கறிகள் வரத்து குறைவால் கடையடைப்பு பண்ணினோம். இப்போ, திறந்திருக்கோம். மேலும் நடப்பு காய்கறிகளின் வருகை குறைவால், காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5லிருந்து 10 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. லாரிகள் ஸ்டிரைக் கைவிடப்பட்டால்தான் விலை குறையும். இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள் சுமூக தீர்வு காண வேண்டும்’ என்றார்.�,