மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் பணத்தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், சென்ற வாரம் முதன்முறையாக பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்பு, கடந்த 13ஆம் தேதி நிலவரப்படி, 60 சதவிகிதம் அளவிலான புதிய நோட்டுகளை மக்களுக்கு விநியோகித்திருப்பதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும், இதே வேகம் நீடித்தால் பிப்ரவரி மாத முடிவுக்குள் திரும்பப்பெறப்பட்ட நோட்டுகளில் 80 சதவிகித நோட்டுகள் விநியோகிப்பட்டுவிடும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவிப்பு வெளியான பிறகான ஒன்பது வாரங்களில் பணப்புழக்கம் சரிவிலேயே இருந்ததுவந்தது. இந்நிலையில் ஜனவரி 13ஆம் தேதி வரையிலான கடைசி ஒரு வாரத்தில் மட்டும் பணப்புழக்கம் ரூ.52,783 கோடியாக இருந்துள்ளது. அதவாது பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பணப்புழக்கம் முதன்முறையாக சென்ற வாரத்தில் அதிகரித்துள்ளது. இது 5.88 சதவிகித உயர்வு ஆகும். நவம்பர் மாதம் 4ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.17,97,460 கோடி. அதற்கடுத்த வாரங்களில் பணப்புழக்கம் சரிந்து, ஜனவரி 6ஆம் தேதியில் ரூ.8,98,020 கோடியாக குறைந்தது. இந்நிலையில் முதன்முறையாக ஜனவரி 13ஆம் தேதியில் பணபுழக்கம் 5.88 சதவிகிதம் அதிகரித்து, ரூ.9,50,803 கோடியாக உயர்ந்திருக்கிறது.�,