நாட்டுல இருக்குற கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூடிகிட்டு இருக்காங்க, காஞ்சிபுரத்துல இட்லி கடை போட்ட எங்க சின்ன மாமனார் லட்சாதிபதியாகிட்டாருன்னு நம்ம தம்பி ஒருத்தன் பெருமையா சொன்னான். இட்லி கடைக்கே இந்த எஃபெக்ட்டுனா டீ கடை மட்டும் போட்ருந்தாருனா ஆட்சியையே பிடிச்சுருப்பாருன்னு சொன்னேன்.
அத்தி ப்ரோக்கு இருக்குற பவரே தனிதான். அவரை கொண்டுபோய் குளத்துக்குள்ள இறக்க போறாங்கன்னு நினைக்கும்போதுதான் மனசு கிடந்து வலிக்குது. நமக்கும் கொஞ்ச நஞ்ச கன்டன்ட்டா கொடுத்துருக்காரு? இனிமே எப்ப பார்க்கபோறோம்..
அப்படியே அவரை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கொண்டு போய் வச்சு தரிசனத்துக்கு ஏற்பாடு பண்ணுனா தமிழ்நாடு வேற லெவல் ஆயிடும். எல்லாம் இந்த திருப்பதி, சபரிமலை அய்யப்பன் எல்லாம் சேர்ந்து லாபி பண்ணிட்டாங்கன்னு பேசிகிடுறாங்க.
இதை ஒரு தம்பிட்ட சொன்னேன்.. அதுக்கு அவன் சொல்றான் அத்தி வரதரை எங்க ஊருக்கு கொண்டு வந்தா நயன்தாரா வருவாங்களான்னு கேட்கிறான்.. அடேய்.
**கோழியின் கிறுக்கல்!!**
தன் சொந்த பந்தம் வரும் பொழுது அம்பியாகவும், நம் சொந்த பந்தம் வரும் பொழுது அந்நியனாகவும், அவதாரமெடுக்கும் மனைவியிடம் ஆயிரம் ‘விக்ரம்’கள் ஒளிந்திருக்கிறார்கள்!!
**உள்ளூராட்டக்காரன்**
இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதே?
புது காஷ்மீர் பொறந்துடுச்சு
மோட்டார் வாகன விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறதே?
காஷ்மீர் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்
பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதே?
பாகிஸ்தான் பயந்துடுச்சு
**SKP KARUNA**
காஃபி டே சித்தார்த், கிரிக்கெட்டர் வி.பி.சந்திரசேகர் வரிசையில் கர்நாடகாவில் ஒரு தொழிலதிபர் குடும்பத்தையே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துள்ளார். நல்ல தொழில் கூட நடத்துபவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நஷ்டமடைகிறது. பங்குச் சந்தையோ தினமும் ரத்தகாவு வாங்குகிறது.
**@gips_twitz**
தான் பிடித்த முயலுக்கு மூனு கால் என்பர் – பழைய இந்தியா பழமொழி
தான் பிடித்த முயலை முதலை என்பர் – புதிய இந்தியா புதுமொழி
**மித்ரன்**
அண்ணா உங்க First Year நோட்ஸ் தருங்கீளா…
அண்ணான்னு சொல்ரவங்களுக்கெல்லாம் நாங்க நோட்ஸ் கொடுக்கறதில்லை…
**கோழியின் கிறுக்கல்!!**
பெரும்பாலான வீடுகளில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்த பின் அண்ணன் மணமுடிப்பது, நாத்தனார் சண்டையை சமாளிப்பதற்காகவே இருக்கும்!!
**A.P.Perumal.**
சிக்னலில் மஞ்சள் விளக்கு எரிய ஆரம்பிக்கும் போதே வண்டியை நிறுத்தினால் வீட்டில் மனைவி மஞ்சள் குங்குமத்தோடு இருப்பார்கள்.
**ஜோக்கர்…**
Lucas- TVS மாதிரி பெரிய நிறுவனங்களே மண்ணை கவ்வுது. அதுக்கும் சங்கீஸ் இனிமே பொலுயுசன் பிரச்சினை இருக்காதுனு ஆர்கஸம் அடையுறாங்க.
வாழமுடியாம கொத்து கொத்தா தற்கொலை பண்ணிகிட்டா கூட “அடடா மக்கள் தொகையை எவ்ளோ அழகா கட்டுப்படுத்துறார்”னுதான் கூவுவாங்க.
**காளையன்**
முன்பு ‘பெரியவங்க பேசற இடத்தில் உனக்கென்னடா வேலை?’ எனக் கேட்ட பெற்றோர்கள்,’பையன் கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்’ என்று சொல்லும் போது தான் நாம் முழுமனிதன் ஆகிறோம்.
**ச ப் பா ணி**
இந்திய தொலைக்காட்சியில் இரண்டாம் முறையாகனு தான் விளம்பரம் போடனும். முதல்முறை தமிழ்ராக்கர்ஸ்க்கே உரிமை
**Hasan Kalifa**
கருப்புப்பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக அச்சுறுத்தலாக இருக்கிறது!- மோடி.
//இதைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே சென்றனர்,அந்த சிக்கிம் எம்.ஏல்.ஏக்கள்.
**A.P.Perumal.**
வைகை எக்ஸ்பிரஸ்க்கு வயசு 42 .. !!
அத்திவரதரை விட இரண்டு வயசு சீனியர்.
**காட்டுப்பயல்**
நாளையிலிருந்து அத்தி வரதர் கவரேஜ் கிடையாது நியூஸுக்கு கொஞ்சம் அலையனும், இவ்வளவு நாள் நோகாம ராசாத்தி வந்தாங்க, நயன்தாரா வந்தாங்கன்னு ஓட்டிகிட்டு இருந்தாங்க
**உள்ளூராட்டக்காரன்**
என்றைக்கு ஒரு ஆண், ‘எனக்கு உப்புமா பிடிக்கலை; வேற ஏதாவது செய்’ன்னு வாயை திறந்து சொல்ல முடிகிறதோ, அன்று தான் நம் நாடு சுதந்திரம் அடைந்ததாகப் பொருள்
– காந்திஜியின் கடுப்பு ஸ்டேட்டஸ்
**எனக்கொரு டவுட்டு**
“அவங்க சொல்றது உண்மையா” என ஆரம்பிக்கும் உரையாடல் திகில் படத்திற்கு இணையானது..!
**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**
குடும்ப கட்டுப்பாடு என்பது உண்மையான தேசப்பற்று : மோடி.
# ரைட்டு, அடுத்து மனுசங்களை எல்லாம் செல்லாதுன்னு அறிவிக்கப் போறாரு..
**உள்ளூராட்டக்காரன்**
அத்தி வரதரை கடும் போராட்டத்திற்கு பின் தரிசித்தவர்களிடம், உங்களுக்கு அத்தி வரதரை பற்றி முன்னாடியே தெரியுமா, அவர் மீது அவ்ளோ பக்தியா என்று கேட்டால்,
வரும் பதில் எல்லாம், ‘எனக்கு பஸ் 6 மணிக்கு தான்’ங்கிற ரேஞ்சுல தான் இருக்கு
**கருப்பு கருணா**
இந்த சிம்புவின் கல்யாணத்துக்கு ஒரு பெண் பார்த்து கொடுக்காமல் அத்திவரதர் குளத்துக்குள்ள போறத நினைச்சாதான் துக்கம் தொண்டையை அடைக்குது.
தம்பி… ஒரு நாற்பது வருஷம் வெயிட் பண்ணுங்க…
-லாக் ஆஃப்
**
மேலும் படிக்க
**
**[டிவிஎஸ் லூகாஸ்: பறிபோகும் வேலைகள்!](https://minnambalam.com/k/2019/08/16/17)**
**[அத்திவரதரை ஓ.பன்னீர் மும்முறை தரிசித்தது ஏன்?](https://minnambalam.com/k/2019/08/16/19)**
**[டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி!](https://minnambalam.com/k/2019/08/15/63)**
**[எனது சம்பளம் கட்சிக்கே: வைகோ](https://minnambalam.com/k/2019/08/16/13)**
**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://minnambalam.com/k/2019/08/14/18)**
�,”